After Yang | Caterpillar and Butterfly


இந்த படம் எப்பொழுதும் என் மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும்.
ஒரு உன்னதமான, மிகச் சிறந்த கலைப்படைப்பு என்றே நான் சொல்லுவேன்.

Kogonadaவின் முந்தைய படமான Columbus எனக்கு மிகவும் பிடித்தமான படம். After Yang படம் என்னை உணர்வெழுச்சியின் உச்சத்துக்கொண்டு கொண்டு சென்றது. நாம் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் நமக்கு என்ன உணர்த்த நினைக்கின்றன? மனிதன் தன்னுடைய எல்லையை, முடிவை, வீழ்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தன்னுடைய நீட்சியாகத் தொடர்ந்து கண்டுபிடித்துவரும் இந்தத் தொழில்நுட்பங்கள், மீண்டும் மீண்டும் மனிதனை ஒரு இருண்ட மூலைக்குத் தூக்கி எறிகின்றன.

நாம் கண்டுபிடித்துவரும் தொழில்நுட்பங்கள், மீண்டும் மீண்டும் நம்முடைய போதாமைகளை நமக்கு உணர்த்துகின்றன. நம்முடைய போதாமைகளை எதிர்கொள்ளும் நாம், நம்மை மேம்படுத்திக்கொள்வதை விட, நம்முடைய போதாமைகளைச் சரிசெய்ய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில்தான் கவனம் செலுத்துகின்றோம் என்பது இங்கு கவனிக்க வேண்டியது.

இந்தப் படம் ஒரு தொழில்நுட்பத்தின் மரணத்தையும், அந்த மரணத்தின் மூலம் மனிதன் தன்னை மீட்டெடுத்துக்கொள்ளும் பாதையைக் கண்டடைகிறான் என்பதையும் மிக அழகாகப் பேசியிருக்கிறது.

இந்தப் படத்தில் ஓர் இடத்தில் Lao Tzu-வின் வார்த்தைகளை அந்த ரோபோ குறிப்பிடும்: “What the caterpillar calls the end, the rest of the world calls a butterfly.” இதுதான் படத்தின் சாரம். தவறவிடக் கூடாத ஒரு படைப்பு இது.

Comments

Popular posts from this blog

வெர்ட்டிக்கல் சினிமா - புது அழகியலா ? புது வியாபாரமா ?

A Letter of Motivation by Benoit Rouilly

Contemplation Cinema Screening (FAQ)