The Red Turtle and a Wild Snail.

 


தி ரெட் டர்டல் படம் பார்த்தவர்கள் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் The Sound of a Wild Snail Eating.


இந்தப் புத்தகத்தை எழுதிய எலிசபெத் என்பவர் கண்டுபிடிக்க முடியாத ஒரு கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு, நாள் முழுவதும் படுக்கையிலேயே தனது நாட்களைக் கழிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

எலிசபெத் எழுந்து நடந்தாலும், அதிகபட்சம் சில நொடிகளே அவளால் நிற்க முடியும்.

ஒரு நாள், நோயாளியாக இருக்கும் எலிசபெத்தைப் பார்க்க வரும் அவளுடைய தோழி ஒருவர், அவளுக்கு உயிருள்ள ஒரு காட்டு நத்தையைக் கொண்டு வருகிறாள்.

ஒரு சிறிய கண்ணாடித் தொட்டியில், சுற்றிலும் சில இலைகளை அலங்கரித்து, அந்த நத்தையை அதற்கு நடுவில் விட்டுவிட்டு செல்கிறாள்.

எலிசபெத்துக்கு ஒரே துணையாகவும், ஒரே ஆறுதலாகவும், அவளுடைய பார்வைக்குத் தென்படும் ஒரே உயிரினமாகவும் அந்த நத்தை இருக்கிறது.

ஏதுமற்ற அந்த அறையில், தினமும் அந்த நத்தையை மட்டுமே எலிசபெத்தால் அவதானிக்க முடிகிறது.

அந்த நத்தையின் நகர்வு, அது உணவருந்தும், தூங்கும் விதம், அதன் உயிரியல் குணங்கள்என்று அனைத்து விதமான அம்சங்களையும் அவள் கவனிக்கிறாள்.

அந்த அறையிலிருந்து சில அடி தூரத்தில் காணப்படும் சாலையில் ஓடும் கார்கள், பரபரப்பாக நகரும் மனிதர்கள், சுழன்றடிக்கும் உலகம் ஆகியவற்றிலிருந்து மாறுபட்டு, இந்த நத்தையின் நகர்வு அவளுக்கு இதமான நிம்மதியை உண்டாக்குகிறது.

எலிசபெத் தன்னுடைய வாழ்க்கையை அந்த நத்தையின் இருப்போடு பொருத்திப் பார்த்துக்கொள்கிறாள்.

அந்த நத்தை அவளுக்கு மிக நெருக்கமாக மாறுகிறது. தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிய பார்வையில் சில வெளிச்சங்களையும், சில புதிய கோணங்களையும் அந்த நத்தையின் மூலம் அவள் பெறுகிறாள்.

நான் இங்கு கூறியது அந்தப் புத்தகத்தின் வெறும் 5 சதவீதம்தான். ஆனால், இந்தப் புத்தகத்தை வாசிப்பதன் மூலம் ஏற்படும் அனுபவம் நமக்குள் ஒரு பூரிப்பை ஏற்படுத்தக்கூடியது.

தவறவிடாமல் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம் இது.

Comments

Popular posts from this blog

வெர்ட்டிக்கல் சினிமா - புது அழகியலா ? புது வியாபாரமா ?

A Letter of Motivation by Benoit Rouilly

Contemplation Cinema Screening (FAQ)