Before Monsoon Short Film Screening
அனைவருக்கும் வணக்கம்,
நாளை சனிக்கிழமை(25.07.2026) அன்று மாலை 6 மணி அளவில் Before Monsoon என்கிற 30 நிமிடக் குறும்படம் திரையிட இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இயக்குநருடன் கலந்துரையாடல் நிகழும்.
இது காண்டம்ப்லேஷன் சினிமாவின் முக்கியமான நிகழ்வாக பார்க்கிறேன். ஏனென்றால், Contemplation Cinema Honour என்கிற முன்முயற்சியில், இந்தியாவில் இருக்கும் சில ஸ்லோ சினிமா படைப்பாளின் படைப்புகளை தொடர்ந்து திரையிட திட்டமிட்டுள்ளோம்.
இந்தியாவில் உருவாகி வரும் ஸ்லோ சினிமாக்கள் பெருமளவில் திரைப்பட விழாக்களில் மட்டுமே பார்க்கக் கிடைக்கும். நம்முடைய நோக்கம் அதை பொதுமக்களிடமும், அனைத்து விதமான பார்வையாளர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே.
நம்முடைய வாழ்க்கையில், நம்முடைய நாளின் ஒரு குறிப்பிட்ட காலத்தை எதற்காகச் செலவிடுகிறோம் என்பது மிக முக்கியம். நாம் செலவிடும் நேரமும், பணமும் ஏதேனும் அர்த்தமுள்ளதாக, நம்முடைய வாழ்க்கையை உண்மையாகவே மேம்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். ஸ்லோ சினிமாவில் நீங்கள் செலவிடும் நேரமும், பணமும் அதை உங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றுகிறது. அதற்கு ஒரு கனமான மதிப்பீடுகளை உருவாக்குகிறது. அது நம்மை உருமாற்றக்கூடியது. நாங்கள் முன்னரே சொன்னது போல், ஸ்லோ சினிமா வெறும் ஒரு மாற்று திரையனுபவமாக இருப்பதைத் தாண்டி, அது வாழ்க்கையை அவதானிக்க உதவும் ஒரு கருவியாக இருக்கும்.
அனைவரும் கலந்துகொண்டு, உங்கள் ஆதரவை தீவிரமாகத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Short Film Screening: Before Monsoon (2025)
A Tamil short film by G. Boseram
🗓️ Saturday, 25 July
🕕 6:00 PM – 8:00 PM
📍 IDAM – The Art & Cultural Space, Kodambakkam, Chennai
🎟️ Free Entry
Everyone is welcome.
Fill the Form to Attend: https://forms.gle/okuFoLQTbgkJpitU6
Comments
Post a Comment