Before Monsoon | Screening day
Before Monsoon குறும்படம் திரையிடல் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்தத் திரையிடல் மிகவும் முக்கியமானதாக நான் கருதுகிறேன். தமிழில் ஸ்லோ சினிமா என்ற ஒன்றே கிடையாது. இந்திய அளவில் ஆங்காங்கே சில படைப்பாளிகள் ஸ்லோ சினிமா படைத்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் பரவலாக வெளியுலகிற்குத் தெரிவதில்லை. அதுபோன்ற சில படைப்பாளிகளைக் கண்டடைந்து, அவர்களுடைய படைப்புகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்களது நோக்கம்.
இந்தப் புதிய முயற்சியை நாங்கள் Contemplation Cinema Honour என்று அழைக்கிறோம். இதற்கு மக்களாகிய நீங்கள் பெரும் ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வந்திருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


Comments
Post a Comment