Mother and son | மரணத்தின் நிழலில்



Alexander Sokurov வின் Mother and son (1997) ஒரு தாய், மகன் உறவைப் பற்றிய படம் என்ற அளவில் நின்றுவிடுவதில்லை. மரணத்தின் நிழலில், ஒருவருடன் இருப்பது என்ற அனுபவத்தை படம் ஆராய்கிறது. இறந்து கொண்டிருக்கும் தாயை மகன் கவனித்துக்கொள்கிறான்; அவளைத் தாங்குகிறான், அவளுடன் பேசுகிறான், அவளுடன் நடக்கிறான். வெளிப்படையாகப் பார்த்தால் இவை மிகச் சாதாரணமான செயல்கள். ஆனால் மரணம் அருகில் இருப்பதை அறிந்தவுடன், இந்தச் சாதாரண தருணங்கள் தங்களுடைய இயல்பான அர்த்தத்தை இழந்து, இன்னும் ஆழமாக மாறுகின்றன. உதாரணமாக, படத்தின் தொடக்கத்தில் மகன் தனது தாயின் தலைமுடியைச் சீவி விடும் காட்சி வருகிறது. சாதாரண சூழலில் இது ஒரு அன்றாடச் செயலாகவே தோன்றலாம். ஆனால் தாய் இறப்பின் விளிம்பில் இருக்கிறாள் என்பதும், அவளுக்கு இன்னும் சில மணி நேரங்களோ அல்லது சில நாட்களோ மட்டுமே இருக்கக்கூடும் என்பதும் நமக்குத் தெரிந்தவுடன், அந்தச் செயலின் அர்த்தம் முற்றிலும் மாறுகிறது. இதனால் அந்த செயல் இயல்பை காட்டிலும் தீவிரமான emotional intensity யை பெறுகிறது. 

Sokurov இங்கே கதையை முன்னோக்கி நகர்த்துவதைவிட, நேரத்தை நம்மால் உணரச் செய்கிறார். நீண்ட shots, மெதுவான movement, silence, மற்றும் நிகழ்வுகளற்ற இடைவெளிகள் ஆகியவை அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பிலிருந்து பார்வையாளரை விலக்குகின்றன. இதனால் movement ஒரு narrative action ஆக இல்லாமல், time அனுபவமாகிறது. Deleuzeன் time-image என்ற கருத்துடன் இது தொடர்புபடுகிறது image இனி action னை மட்டுமே காட்டுவதில்லை; காலத்தின் இருப்பையே வெளிப்படுத்துகிறது.

தாயின் பலவீனமான உடலும் இங்கே முக்கியமானது. அவளுடைய உடல் நோயின் அறிகுறி மட்டுமல்ல; கடந்து செல்லும் காலத்தின் visible form. அவளால் தனியாக நடக்க முடியாதபோது, மகன் அவளைத் தாங்குகிறான். இந்த physical dependence, அவர்களுடைய உறவின் இயல்பான மாற்றத்தையும் வெளிப்படுத்துகிறது ஒருகாலத்தில் தன்னைத் தாங்கிய தாய், இப்போது மகனால் தாங்கப்படுகிறாள்.

படத்தின் landscape களும் இதே temporal experience யை விரிவுபடுத்துகின்றன. மனித வாழ்க்கை குறுகியது; இயற்கையின் movement அதைவிடப் பெரிய கால அளவில் தொடர்கிறது. தாய் மறைந்து கொண்டிருக்கிறாள், ஆனால் காற்றும் மரங்களும் வானமும் தொடர்ந்து இருக்கின்றன. இதனால் மனிதனின் mortality எந்த dramatic event ஆகவும் அல்லாமல், உலகத்தின் தொடர்ச்சிக்குள் நிகழும் ஒரு அமைதியான உண்மையாகத் தோன்றுகிறது.

இதனால் Mother and son மரணம் வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறது என்று கூறுவதில்லை. மாறாக, மரணத்தின் awareness நம்முடைய attention னை மாற்றுகிறது. ஒருவருடன் இருப்பது, அவரைப் பார்ப்பது, அவரைத் தொடுவது போன்ற சாதாரண செயல்கள், அவருடைய absence நெருங்கும்போது புதிய intensity  பெறுகின்றன. Sokurov வின் cinema இந்த intensity யை dialogue மூலம் விளக்காமல், duration மூலமாகவும், அம்மாவுக்கும் மகனுக்கும் இடையில் இருக்கும் spiritual connection மூலமாகவும் அனுபவிக்கச் செய்கிறது.

அதனால்  இந்தப்படம் ஒரு dying mother ன் கதை மட்டுமல்ல. அது ஒரு மனிதன் மறைந்து கொண்டிருக்கும் இன்னொரு மனிதருடன் பகிர்ந்து கொள்ளும் நேரத்தைப் பற்றிய படம். இங்கே செயலை விட  presence முக்கியமாகிறது; narrative வை விட duration முக்கியமாகிறது; மரணத்தைவிட, மரணம் வருவதற்கு முன் இருக்கும் அந்தச் சிறிய நேரம் முக்கியமாகிறது.

Comments

Popular posts from this blog

வெர்ட்டிக்கல் சினிமா - புது அழகியலா ? புது வியாபாரமா ?

A Letter of Motivation by Benoit Rouilly

Contemplation Cinema Screening (FAQ)