Diary of a Country Priest (1951) - All is Grace

 Diary of a Country Priest (1951)



படம் பார்த்த பின்பு அதை பற்றி படிக்க வலைதளங்கள் சென்றேன். பெரும்பாலுமாக நாம் தொடர்ந்து படித்து வரும் விமர்சனக் கட்டுரைத் தளங்கள் எல்லாம் இது தோல்வியை குறித்த படம் என்று குறிப்பிடுகிறார்கள்.

என்னுடைய பார்வையில் இந்த படம் தோல்வியை பற்றிய படம் அல்ல, மாறாக தோல்வி எப்படி உருவாகிறது என்பதை பற்றிய படம் என்றே நினைக்கிறேன்.

வெளியில் பார்க்கும் போது அந்த priest முற்றிலும் தோல்வி அடைந்தவன் போல தெரிகிறான். மக்களின் அங்கீகாரம் இல்லை, அவன் வேண்டியது அவனுக்கு கிடைக்கவில்லை, பயில வரும் குழந்தைகள் அவனை ஒரு நகைப்பொருளாக நடத்துகிறார்கள், உடல் சிதைகிறது, கடைசியில் இறக்கிறார். அவன் வெளியிலும் சரி, உடம்பிலும் சரி, ரெண்டுமே அவனை வதைக்கிறது. அது அவனின் கடவுள் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்துகிறது.

படத்தில் priest ன் இரண்டு வாழ்க்கையை பார்க்கிறோம். ஒன்று அவரது “outer life” அதில் சமூகம், மொழி, உறவுகள், அதிகாரம், பணம், பெயர், மதிப்பு, வேடங்கள் ஆகியவை இருக்கின்றன. அவன் மற்றவர்களுடன், சமூகத்துடனும் கொண்ட தொடர்பு. மற்றொன்று அவனது “inner life” அதில் அவனுடைய பயம், நம்பிக்கை, கடவுள் பற்றிய கேள்வி, குற்றவுணர்வு, அன்பு, அமைதி ஆகியவை இருக்கின்றன. இந்த உலகத்தை யாரும் நேரடியாகப் பார்க்க முடியாது. இது பெரும்பாலும் அவன் டைரியில் குறிப்பிடுவது. பொதுவாக மனிதன் இந்த இரண்டு உலகத்திற்கும் நடுவே பாலம் கட்ட முயற்சிக்கிறான். ஆனால் இரண்டிற்கும் “முரண்” எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அவனது புற வாழ்க்கை, அக வாழ்க்கையில் அவன் அடைய நினைக்கும் ஒரு spiritual state யை குலைக்கிறது. அவரது mentor அவனின் செயல்களில் இருக்கும் குறைகளை சொல்லி, இங்கு ஒரு order இருக்கிறது, அது படியே எல்லாம் நடக்கும் என்று சொல்லும் போது அது young priest யை பெரிதும் சோதிக்கிறது. ஆனால் அவன் தொடர்ந்து தனது மனதில் இருக்கும் உண்மையை சொல்லிக்கொண்டே இருக்கிறான்.

இதற்கு சிறந்த உதாரணமாக கவுண்டஸின் உடனான உரையாடலை சொல்லலாம். ஒரு கட்டத்தில் “God is not a torturer, all he want us to be merciful to ourselves” என்று priest சொல்கிறார். இந்த உரையாடலில் அவர்கள் இருவருமே தனது inner life யை பிரதிபலிக்கும் படி Bresson எழுதியிருப்பார். அங்கு ஒரு suffering being இன்னொரு suffering being உடன் உரையாடுகிறது என்பது போல் தான் இருக்கும். அதில் எந்த societal state யும் இருக்காது.

இந்த கதை முழுக்க priest அந்த இரண்டு உலகங்களுக்கு நடுவில் சிக்கியிருக்கிறார். இந்த இரண்டையும் அவர் இணைக்க முயற்சிக்கிறார், முடியாமல் தவிக்கிறார். இதை அவர் உடல்நிலையுடன் இணைக்கலாம். அதாவது priest ன் உடல் சிறிது சிறிதாக அழிவு நிலையை அடையும் போது அவனது ஆன்ம reflection தெளிவாகிக்கொண்டே போகிறது. உடல் ரீதியாக அவனுடைய suffering அதிகரிக்கும் போது அவனின் டைரி குறிப்புகள் உண்மைக்கு நெருக்கமாகிக்கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் முடியாமல் விழும் நிலையில் “Mother Mary“ யையும் “Jesus“ யையும் பார்த்ததாக டைரியில் குறிப்பிடுகிறான்.

இறுதியில் அவன் முழுவதுமாக தன்னை இழக்கையில் (உடலளவிலும் சரி, மனதளவிலும் சரி) “what does all matter? All is grace“ என்று சொல்லி முடிக்கிறான். அதை கேட்கும் நமக்கு “All is grace“ என்றதும் படத்தில் நிகழும் எல்லா துயர் சம்பவங்களும் நினைவுக்கு வருகிறது. படத்தில் நிறைய காட்சிகள் அவரது faith யை கேள்விக்கு உட்படுத்தினாலும் “all is grace” என்று முடிந்தது வியக்கத்தக்கது. கட்டாயம் பாருங்கள்.

Comments

Popular posts from this blog

A Letter of Motivation by Benoit Rouilly

Contemplation Cinema Screening (FAQ)